“வெல்லட்டும் மதசார்பின்மை” மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு! பொது மக்களுக்கு அழைப்பு..!
மதுரையில் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா,தமிழ்நாடு (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு வண்டியூர் டோல்கேட் மகாத்மா காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்ததாவது: நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை!’ என்ற முழக்கத்தோடு, ஜனவரி 07ஆம் தேதி மதுரையில் மாபெரும் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்துகின்றது.
இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி,தமிழக எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், பேராயர் யுவான் அம்புரோஸ்,இஸ்லாமிய ஆராய்ச்சி மைய நிறுவனர் மவுலவி ஷாஹூல் ஹமீது ஜமாலி,ஈரோடு நூடுல் இஸ்லாம் மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி முஹம்மது தையிப் தாவூதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில தலைவர் மூவாற்றுப்புழா அஷ்ரப் பாகவி, கர்நாடகா மாநில தலைவர் அப்துல் மஜீத் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது. மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவளி அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸூகிருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா, மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.





