--- --:--:-- --

பேருந்து நடுவழியில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே உடைந்த ஆக்ஸிலரேட்டர்..!

9

சேலம் மாநகரம் 70 வது நம்பர் நகர பேருந்து சேலம் பட்டி பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள், பள்ளி கல்லூரி, மாணவ, மாணவிகள் இருந்தனர்.

 

அப்பொழுது நான்கு ரோடு அருகே மாநகர பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது பேருந்தின் ஆக்சிலேட்டர் கட்டாகி சாலையில் விழுந்து பேருந்தை நிறுத்த முடியாமல் ஓட்டுநர் மேம்பாலத்தின் மீது சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு லாவகரமாக பேருந்தை இயக்கினார்.

 

இதனால் சாலை முழுவதும் பலத்தை சத்தம் எழுப்பியவாறு பேருந்து வந்தது. அப்பொழுது உள்ளே இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டு பேருந்தை நிறுத்த கத்தினர்.

 

அப்பொழுது பேருந்தை ஓரமாக நிறுத்தியதுடன் 50க்கும் மேற்பட்ட பயணிகள் மாணவ, மாணவிகள் பதறி கொண்டு கீழே இறங்கினர். இதனால் ஆட்சியர் அலுவலக சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon