--- --:--:-- --

முதியவர் செய்த செயலால் கடைசியில் நேர்ந்த சோகம்..!

8

திருப்பத்தூரில் திருடிய செம்பு கம்பிக்கான பணத்தை மனைவி முன்பு கடையின் உரிமையாளர் கேட்டதால் அவமானத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

 

திருப்பத்தூர் அடுத்த அஞ்சலம்பட்டியை பகுதியை சேர்ந்த ஞானமுத்து என்பவர் இரும்பு கடையில் அண்ணாமலை என்ற முதியவர் பணியாற்றி வந்தார். அந்த கடையிலிருந்து 300 கிராம் அளவிலான செம்பு கம்பியை அண்ணாமலை திருடி சென்ற பொழுது அதனை ஞானமுத்து கையின் களவுமாக பிடித்துள்ளார்.

 

அப்பொழுது இதற்கு முன்பு காணாமல் போன செம்பு கம்பியையும் அண்ணாமலை தான் திருடி இருக்க வேண்டும் என கருதி அதற்கான தொகையை அண்ணாமலையின் மனைவி முன்பு ஞானமுத்து கேட்டுள்ளார்.

 

இதனால் மனமுடைந்த அண்ணாமலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon