பெண் விவசாயி காலில் விழுந்த குடியரசு துணைத் தலைவர் வைரலாகும் வீடியோ..!
குடியரசுத் துணைத் தலைவர் வயதான விவசாய பெண்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் நூலை எழுதியவர் கலந்து கொண்டார்.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். அப்பொழுது விவசாயிகளுடன் உரையாற்றிய ஜகதீப்தங்கர் வயதான பெண் விவசாயி ஒருவரின் காலில் விழுந்து வணங்கினார்.
புதிய நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட்டு வருமாறு விவசாயிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பெண் விவசாயியின் காலில் விழுந்து குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப்தங்கர் வெளியிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.





