ஓபிஎஸ் கிளம்பும் வரை காரில் காத்திருந்த சசிகலா..!
அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தி விட்டு, உறுதிமொழி ஏற்றார். அதன்பின் ஓ. பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்படும்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மரியாதை செலுத்துவதற்காக எம்.ஜி.ஆர் நினைவிடம் வந்தார். இதனை கவனித்த ஓ.பன்னீர்செல்வம் தனது காரில் இருந்து இறங்கி சென்று திருநாவுக்கரசரிடம் நலம் விசாரித்தார்.
அதைமுடித்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் பிரதான சாலையை வருவதற்கு முன்பாக வி.கே. சசிகலா அந்த பகுதிக்கு வந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கார் வெளியே செல்லும் வரை சாலையிலேயே சசிகலா காத்திருந்து பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு வந்தார்.
ஓ.பன்னீர்செல்வமும், வி.கே. சசிகலாவும் ஒருவரை ஒருவரை சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருந்தும் இருவரும் அதை தவிர்த்தது போலவே நடவடிக்கைகள் இருந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




