--- --:--:-- --

நான் திருடவில்லை எனக்கூறி தரையில் விழுந்து கதறிய திருடன்..!

7

திருட்டு வழக்கில் கைதான நபர் போலீசாரிடம் செல்ல மாட்டேன் என கூறி தரையில் படுத்து எழ மறுத்து கதறிய சம்பவம் நாகுரில் அரங்கேறியுள்ளது. நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடு போயியுள்ளது.

 

அது குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் சரித்திர பதிவேடு குற்றவாளி கார்த்திகேயன் என்பவரை கைது செய்தனர். தங்களது இருசக்கர வாகனத்தில் நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது கார்த்தி மயக்கம் வருவதாக கூறி கீழே சரிந்துள்ளார்.

 

போலீசார் வாகனத்தை நிறுத்தி தரையில் படுத்த அவர் தான் இரு சக்கர வாகனத்தை திருடவில்லை எனக் கூறியதோடு தரையில் இருந்து எழமறுத்துள்ளார். இதனால் அவரை அழைத்துச் செல்ல முடியாமல் போலீசார் திணறினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon