கடன் வாங்கிய தந்தை.. மகனை கடத்திய கும்பல்..!
திருச்சியில் கடன் வாங்கியவரின் மகனை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அடுத்த மஞ்சள் பட்டி சேர்ந்த ஞானபிரகாசம்.
இவர் புதுச்சேரியை சேர்ந்த சேகர் சரண் என்பவரிடம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கடனாக வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த தொகையை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி ஞானபிரகாசத்தின் மகனை சேகர் சரண் கடத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கடத்தப்பட்ட நபரை மீட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





