--- --:--:-- --

அறுவை சிகிச்சை உபகரணங்களை சிறுவன் சுத்தப்படுத்திய வீடியோ..!

6

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு கத்தி வெட்ட பயன்படுத்திய ரத்தம் மிகுந்த கத்தி போன்ற மருத்துவ கருவிகளை 12 வயது சிறுவன் சுத்தம் செய்ததாக கூறப்படும் சம்பவம் பற்றி மருத்துவமனைய டீன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

 

தோப்பு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பவுன்ராஜின் கால் விரல் ஒன்று அண்மையில் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்ட நிலையில் அந்த கட்டை மாற்றியதற்கான கருவிகளை அவரது மகனை சுத்தம் செய்ததாக காணொளி ஒன்று வெளியானது.

 

இது குறித்து ஆய்வு செய்த பின் பேட்டி அளித்த மருத்துவமனை டீன் சிவக்குமார் இதனை தனது மருத்துவமனை ஊழியர்கள் தான் செய்வார்கள் எனவும் இந்த சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது என்றும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது எனவும் தெரிவித்தார்.

 

தமது படுக்கையருகே மருத்துவப் பணியாளர்கள் வைத்துவிட்டு சென்ற ரத்தம் தோய்ந்த உபகரணங்களை தான்தான் மகனை விட்டு சுத்தம் செய்ய சொன்னதாக பொன்ராஜ் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon