நண்பனின் இறப்பால் சோகம்.. சக நண்பரின் சாவில் மர்மம்..!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்ற வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த நபரை பிடிக்கும் பணியில் உள்ளூரில் வழி காட்டுவதற்காக போலீசார் உடன் சென்ற சாமுண்டிபுரத்தை சேர்ந்த பிரபுதேவா என்பவர் இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனால் சோகத்தில் இருந்ததாக கூறப்படும் முத்தம்பட்டியை சேர்ந்த நண்பர் பிரேம் குமார் தனது ஊரில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
இடையில் இவரது நண்பர்கள் சைடிஷ் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்ததாகவும் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபொழுது தோப்பில் தனியாக இருந்த பிரேம் குமார் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.
பிரேம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் பிரேத பரிசோதனையை நடத்த கம்பம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





