முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவன்..!
முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக தனது சேமிப்பு உண்டியல் தொகையை வழங்கிய சிறுவனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டினார்.
மியான்மர் பகுதியில் முகமது ஃபர்கான் தனது சேமிப்பு தொகையை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியில் செலுத்த முடிவு செய்தார்.
இதற்காக தனது சேமிப்பு உண்டியலுடன் தலைமை செயலகம் வந்திருந்த சிறுவன் முகமது ஃபர்கானை அழைத்து பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





