நான் வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் – கல்யாணி பிரியதர்ஷன்
மலையாத்திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் தெலுங்கில் வெளிவந்த ஹெலோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தின் மூலம் தான் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆண்டனி. இப்படத்தில் ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ்-ஐ கற்ற இளம் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கதாபாத்திரத்திற்காக தான் வாங்கிய அடி, உதை, காயங்கள், தனது புன்னகை மற்றும் தான் விட்ட கண்ணீர் அனைத்தும் நிஜம் என கூறி பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறியது, “எப்போதுமே ஒரு வசதியான வட்டாரத்திற்குள் நம்மை வைத்து கொள்ளுவது நம்முடைய வளர்ச்சிக்கு எப்போதுமே உதவாது என்பதை நாம் தாமதமாக தான் உணர்ந்தேன். இப்படம் என்னுடைய சண்டை காட்சிகளின் போது ரசிகர்களின் ஆரவார கூச்சலும், கைதட்டல்களை என்னை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.






