போதையில் மனைவியை அடித்த கணவன்.. தட்டி கேட்ட மகன்.. உயிரை விட்ட தந்தை..!
ஈரோட்டில் தாய் தந்தையுடன் ஏற்பட்ட சண்டையை தடுக்கச் சென்ற மகன் தள்ளி விட்டதில் தந்தை கீழே விழுந்து உயிரிழந்தார். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பாபு மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.
இளையமகன் சதீஷ்குமார் சண்டையை தொடக்க தனது தந்தையை தள்ளிவிட்டபொழுது பாபு கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சதீஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.






