சென்னை புறநகர் ரயில் சேவைகள் நாளையும் ரத்து..!
சென்னையில் இருந்து சுமார் 190 கி.மீ. தூரத்திற்கு மிக்ஜாம் புயல் விலகி சென்றது. நெல்லூருக்கு வடக்கு – வடகிழக்கு 30 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக நெல்லூர் பகுதியில் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இருப்புப் பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான அனைத்து மின்சார ரயில்களும், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – அரக்கோணம் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





