தந்தூரி சிக்கன் சாப்பிட 4 பேருக்கு வாந்தி மயக்கம்..!
சென்னை கொடுங்கையூரில் இயங்கி வரும் அசைவ உணவகத்தில் கடந்த ஞாயிறு இரவு பிரியாணியில் சிக்கன் தந்தூரியும் சாப்பிட நான்கு பேருக்கு வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அவர்கள் நான்கு பேரும் ஸ்டாண்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்து உணவு மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.






