ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நாமக்கல்லை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்று குற்றாலத்தில் குளித்துவிட்டு மினி பேருந்தில் ஊருக்கு திரும்புகின்றனர்.
அப்பொழுது சிங்கிரிபட்டி சொக்கம்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார், மினி பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க போலீசார் விசாரித்து வருகின்றனர்.






