--- --:--:-- --

9 வயது சிறுமி இறப்பிற்கு காரணம்..பாலியல் துன்புறுத்தலா..?

8

யிலாடுதுறை அருகே ஒன்பது வயது சிறுமியின் இறப்பிற்கு பாலியல் துன்புறுத்தல் காரணமாக உள்ளதா? போக்சோ வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்ட உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சிறுமி பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் தரங்கம்பாடி நீதிமன்றத்தின் அனுமதியுடன் சந்திராபுரம் போலீசார் சிறுமியின் உறவினர்கள் ஐந்து பேருக்கு மரபணு பரிசோதனை செய்தனர். அதில் முடிவு எட்டப்படாததால் மேலும் 10 பேரில் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

 

இந்த வழக்கு கடந்த நான்கு வாரமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாக கூறி சமூக ஆர்வலர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் சிறுமி ஓர் ஆண்டாக பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக மருத்துவர் அறிக்கை அளித்து இருப்பதால் போக்ஸோ வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணை உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon