அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் மீது அமலாக்கத்துறை புகார்..!
நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது.
நீர் வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மணல் மாஃபியா மற்றும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பொறியாளர்கள் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மணல் கொள்ளையை அனுமதித்ததன் மூலம் தாங்களும் தவறு செய்து விட்டோம் என அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





