வீட்டுப்பாடம் செய்யாததால் மாணவனை அடித்த ஆசிரியை மீது வழக்கு..!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பள்ளி மாணவனை கம்பால் தாக்கிய பள்ளி ஆசிரியரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 22ஆம் தேதி சமூக அறிவியல் ஆசிரியை மாணவர்களிடம் வீட்டுப்பாடம் ஒன்றை கேட்டுள்ளார். அனைத்து மாணவர்களும் வீட்டு பாடங்களை ஆசிரியரிடம் காண்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்று வந்த பிறகு மாணவன் சந்தோஷிடம் மீண்டும் வீட்டுப்பாடம் நோட்டை ரவீனா கேட்டுள்ளார். அப்பொழுது நோட்டை காணவில்லை என மாணவர் சந்தோஷ் கூறியதும் கோபமடைந்த ரவீனா வீட்டுப்பாடம் செய்யாமல் பொய் சொல்கிறாயா என மாணவர் கம்பால் தாக்கியுள்ளார்.
சந்தோஷ் அம்மா கவிதாவிற்கு உங்கள் மகன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என செல்போனில் ரவினா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற அவர் பள்ளி நிர்வாகம் காவல் நிலையம் குழந்தைகள் நலத்துறை இடங்களில் புகார் தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்த மாணவர் சந்தோஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறை ஆசிரியை ரவீனா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.






