--- --:--:-- --

சாரி சொல்லாத குஷ்பூ.. வீட்டிற்கு சென்ற 7 போலீஸ்..!

3

சேரி மொழி என்ற சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ வீட்டின் முன்பு இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினருமான குஷ்பூ பழங்குடியின மக்களை இழிவு படுத்தும் வகையில் சேரி மொழி என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

 

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சேரி என்று சொல்லக்கூடிய குஷ்பூ புது புது அர்த்தங்களை சொல்லி வருகிறார். சேரி என்ற பதிவுக்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என குஷ்பூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில் குஷ்பூ வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அந்த பிரிவின் மாநில தலைவர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதால் சென்னை பட்டினப் பக்கத்தில் உள்ள குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon