--- --:--:-- --

கல்லூரி விடுதியில் மாணவி விபரீத முடிவு..!

1

ண்ணா பல்கலைக்கழகம் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த மாணவி கல்லூரியில் உள்ளது தனது அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதனை கண்ட சக மாணவிகள் விடுதிக் காப்பாளர் உதவியோடு கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியர் உடலை மீட்டு உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அவரது அறையில் ஒரு கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில் தன்னுடன் படிக்கும் மாணவி ஐந்தாம் ஆண்டு படித்து வருகின்றனர். ஆனால் தான் மட்டும் பெயில் ஆகி மூன்றாம் ஆண்டு படித்து வருவதால் மனவருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதுதான் உண்மையான பிரச்சனையா? வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon