காவல் நிலையத்தில் காதல் ஜோடி செய்த அட்டகாசத்தால் எடுத்த நடவடிக்கை..!
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒழுங்கினமாக நடந்து கொண்ட புகாரில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்குள்ள ஒரு அறையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் இரண்டு பேர் தனிமையில் இருந்ததாகவும் அப்பொழுது ஒழுங்கினமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஏடிஎஸ் வேணுகோபால் அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதே கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும் பெண் காவலர் காவல் நிலையத்தில் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. உடனடியாக விசாரணை மேற்கொண்டு இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.






