--- --:--:-- --

படியில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த விபத்து..!

6

சென்னை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பொழுது தவறி கீழே விழுந்த பள்ளி மாணவன் ஒருவனின் இரு கால்களும் அதே பேருந்தில் பின் சக்கரத்தில் ஏறி துண்டாகின.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு வழி சாலைகள் இருந்து பேருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற பொழுது இந்த விபரீதம் நேரிட்டது. 11ம் வகுப்பு மாணவன் சந்தோஷ் மீது ஏறிய பேருந்து நிற்காமல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

 

மாணவன் இரத்த வெள்ளத்தில் துடித்ததை கண்டதும் படியில் தொங்கி சென்ற சக மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சில வாரங்களுக்கு முன்பு அரசு பேருந்து தொங்கியபடி பயணித்த மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் அடித்து இறக்கிவிட்ட அதே பேருந்து வழித்தடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

Right Menu Icon