நீச்சல் பழகச் சென்று நீரில் மூழ்கிய தம்பதி..!
நாமக்கல் மாவட்டத்தில் கிணற்றில் நீச்சல் பழக சென்ற தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்செங்கோட்டை அடுத்த பகுதியில் சோமசுந்தரம் – மகேஸ்வரி தம்பதியர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 8 வயதில் மகன், 4 வயதில் மகள் உள்ளனர். சோமசுந்தரம் தனது மனைவி மகேஸ்வரிக்கு நீச்சல் கற்று தருவதற்காக அருகிலுள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சோமசுந்தரத்தின் மகள் அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு கிணற்றில் சென்று பார்த்துள்ளார்.
அவரது மகேஸ்வரி சடலமாக கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருச்செங்கோடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் கிணற்றில் இருந்த மகேஸ்வரி உடலை மீட்டதுடன் சோமசுந்தரத்தின் உடலை மீட்டு எடுத்தனர்.
தண்ணீரை சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் அகற்றியதை தீயணைப்பு துறையினர் கிணற்றின் அடிப்பகுதியில் சேற்றில் சிக்கியவாறு கடந்த சோமசுந்தரத்தின் உடலையும் கைப்பற்றினர். நீச்சல் பழக சென்ற தம்பதி உயிரிழந்த நிலையில் குழந்தைகள் இரண்டு பேரும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.





