உடல்நிலை சரியில்லாத அம்மாவை இருசக்கர வாகனத்தில் ஹாஸ்பிடல் கூட்டிச் சென்ற மகன்.. உயிரை பறித்த கொடூரம்..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரது மகன் பிரபாகரன்.
தனது இரு சக்கர வாகனத்தில் காவிரியை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு செட்டியார் பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொழுது திடீரென குறுக்கே வந்த மாடு முட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த காவேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காவிரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





