--- --:--:-- --

75 ஆண்டில் நடக்காதது 5 ஆண்டில் நடந்தது : அரவிந்த் கெஜ்ரிவால்

4

காங்கிரஸ், பாஜகவும் தங்கள் கஜானாவை நிரப்புவதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 17ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவு வருகிறது.

 

இந்த நிலையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

 

 

அப்பொழுது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 75 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் சாதிக்க முடியாததை ஆம் ஆத்மி ஐந்து ஆண்டுகளில் சாதித்துள்ளது என கூறினார். மேலும் காங்கிரஸ் பாஜகவும் தங்கள் கஜானாவை நிரப்புவதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon