--- --:--:-- --

கனமழை தொடர்ந்தால் சதுரகிரிக்கு செல்ல அனுமதி ரத்து..!

6

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கனமழை தொடர்ந்ததால் சதுரகிரிக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

 

தொடர் மழையால் சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வடக்கு பாறை, நாங்குநேர ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

வருகின்ற பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வரும் 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

ஆனால் மழை தொடர்ந்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon