--- --:--:-- --

அரசியலுக்கு யாரும் வரலாம்… ஆனால் இறங்கி வேலை செய்யணும் – வெற்றிமாறன்

6

தமிழ் சமூகத்தில் உரையாடல்களை சினிமா தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், நடிகர் விஜயின் அரசியல் வருகை வரவேற்பதாகவும் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை மெரினாவில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், சமூகத்திலும் அரசியலிலும் தமிழ் சினிமா தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பல உரையாடல்களை தொடங்கி வைத்திருப்பதாகவும் கூறினார். உதாரணாமாக, ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், படத்தின் எதிரொலியாக விளிம்புநிலை மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அரசின் கவனத்தைப் பெற்றதாகவும் கூறினார்.

 

மேலும், விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ” அவரின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். அரசியலில் ஈடுபட ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமையுண்டு. இருப்பினும், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

 

மேலும், பேசிய அவர், அரசியல் என்பது ஒரு சவாலானது என்றும் அதனை எதிர்கொள்ள மனப்பக்குவம் வேண்டும் என்றும், அத்தகைய மனப்பக்குவம் தமக்கு இருக்கும் என்று நினைப்பவர்கள் தான் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon