அரைகுறை ஆடையுடன் ஆடுவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டா? – ரஞ்சித் விமர்சனம்
பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பெண்களை அரைகுறை உடையுடன் ஆட வைப்பதாக நடிகர் ரஞ்சித் விமர்ச்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் சவுரிபாளையத்தில் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஞ்சித் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித், தான் பிறந்த மண்ணில் நிற்பது தமக்கு பெருமையளிப்பதாக கூறினார். தமிழர்களின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம், கோலாட்டம், குச்சி ஆட்டம் போன்றவை ஒரு காலத்தில் பரவி இருந்ததாகவும், தற்போடு மண்ணோடு மண்ணாகி விட்டதாகவும் கூறினார். வள்ளி கும்மி ஆட்டம் மாமியார், மருமகள், பேரன், பேத்தி என அனைவரும் ஒருங்கிணைந்து ஆடும் ஆட்டம் என்றும் தெரிவித்தார்.
முன்பெல்லாம் மொபைல் போன்கள் பேசுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது குழந்தைகள் ஆபாச படம் பார்க்க பயன்படுத்துவதாகவும் கூறினார்.
Happy Sunday, Happy Street என தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற கலாசாராத்தை வளர விடக் கூடாது என தெரிவித்த அவர், வளர விடமாட்டோம் என்று நம்புவதாகவும், பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




