--- --:--:-- --

ஆளுநர் ஆர்.என் ரவி மீது கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!

1

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக ஆளுநர் மறுத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

சுதந்திரப் போராட்டத்தை காட்டி கொடுத்தவர்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்றும் அவர்தான் தற்போது சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டத்தை மறுத்திருக்கிறார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். சங்கர் ஐயாவால்தான் பட்டத்திற்கு பெருமை என்பதை உணராதவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

 

சுந்தரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக ஆளுநர் மறுத்ததற்கான கோப்புகளில் கையெழுத்திடவில்லை எனவும் சென்னை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon