திமுக தோல்வியடையும்.. ஸ்டாலினை எச்சரித்த சீமான்..!
லியோ படத்தின் வசூல் தங்களது கிடைக்கவில்லை என்பதால் திமுக அரசு அதற்கு நெருக்கடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசியவர் கட்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது.
இதுவரை 750 தமிழகம் மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய மற்றும் மாநில அரசுகள் ரசிப்பதாகவும் சீமான் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





