மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர்..!
வேலூரில் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவ மாணவிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மாசிலாமணி உயர்நிலைப் பள்ளியில் கருப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், மாணவர்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேசன் பிரபாகரிடம் மாணவ மாணவிகள் புகாரை அளித்தனர்.
ஆனால் மாவட்ட கல்வி அலுவலர் புகாரை அலட்சியப்படுத்தியதால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





