மாட்டின் தலையில் சிக்கிய குப்பை தொட்டி..!
தலையில் குப்பை தொட்டி சிக்கியதால் செய்வதறியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலா வந்த மாட்டிற்கு அந்த பகுதியை சேர்ந்தவர் உதவி செய்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மகளிர் சுய உதவி குழு மூலமாக சிற்றுண்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மாடு ஒன்று தலையை நுழைத்து சாப்பிட்டது.
அப்பொழுது மாட்டின் தலையில் குப்பைத் தொட்டி சிக்கியதால் செய்வதறியாமல் அங்கும் இங்குமாக மாடு சுற்றியது. இதனை அங்கிருந்தவர்கள் கவனித்து மாட்டிற்கு உதவி செய்ய குப்பை தொட்டியை எடுத்தனர். மாடு அங்கிருந்து சுதந்திரமாக சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





