--- --:--:-- --

நிதின் கட்கரியின் வாழ்க்கை திரைப்படம் அக்டோபர் 27 இல் வெளியீடு..!

1

பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கியுள்ளது.

 

அனுராக் ராஜன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில் ராகுல், ஐஸ்வர்யா, அபிலாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.

 

அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மராத்தி மொழியில் தயாராகி வரும் இந்த படம் மாற்று மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

படம் குறித்து இயக்குனர் கூறுகையில் நிதின் கட்கரியின் அரசியல் பயணம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம் எனவும் அதைவிட சுவாரஸ்யமான அவரது இளமைக்காலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும் நோக்கில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon