கால்நடை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருட்டு..!
தஞ்சை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனை அருகிலேயே சுமார் 40 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது, கடந்த 2 வாரங்களாக புதிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை உபகரணங்களை மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கருவிகள் திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





