16 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வேலூர், தேனி, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.






