--- --:--:-- --

கொரோனா பரவலின் போது உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு உரிய மரியாதை..!

2

கொரோனா வைரஸ் பரவி இக்கட்டான சூழலில் பணியாற்றி உயிர்நீத்த முன்கள பணியாளர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

 

மதுரையை சேர்ந்த 4 என்ற தூய்மை பணியாளரின் மனைவி தாக்கல் செய்த மனுவில் கொரோனா பரவலின் போது உயிரிழந்தார் எனவும் நகராட்சி சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது முன்கள பணியாளராக பணியாற்றி உயிரிழந்த நாகுவின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. வாதங்களை கேட்டு நீதிபதி கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதை மறுக்கக்கூடாது அவரது ஆன்மாவிற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon