தந்தையிடம் கோபித்துக் கொண்டு செல்ல மகள் எழுதி வைத்த கடிதம்..!
தனது தந்தை இரண்டு லட்சம் ரூபாய் விற்பனைக்கு விடப்படுகிறார். பெல் அடித்தால் கூடுதல் தகவல் வழங்கப்படும் என தந்தையிடம் கோபித்துக் கொண்ட 8 வயது செல்ல மகள் வீட்டு கதவில் எழுதி வைத்த சுவாரஸ்ய நிகழ்வு வைரலாகியுள்ளது.
ஒரு தந்தையின் சம்பளத்தை கேட்டு அவரது எட்டு வயது மகள் சண்டையிட்டுள்ளார். இதற்கு அவர் தந்தை முடியாது எனக் கூறியதால் கடுப்பான மகள் இவ்வாறு தந்தை விற்கப்படுகிறார் என கூறிவிட்டு போஸ்டர் வைத்து விட்டார்.
பின்னர் பணி முடிந்து வந்த தந்தை இதனை கண்டு ஆச்சரியத்துடன் ஷாக்காகி அதனை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தனக்கு இவ்வளவு தான் மதிப்பாய் எனவும் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





