சில நிமிடங்களில் நடுங்கிய பேருந்து.. பயணிகளை மிரட்டிய யானை..!
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் சாலையின் நடுவே காட்டு யானைகளின் கூட்டத்தை கண்டு பேருந்தில் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
பத்தினம் திட்டம் மாவட்டத்திற்கு உட்பட்ட கவி பகுதியிலுள்ள சாலையில் காட்டு யானைகள் சாலையின் வழியாக கடந்து செல்வதே வழக்கம் என கூறப்படுகிறது. கேரளா அரசு பேருந்து ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதிகள் கடந்து சென்றது.
இதனை கண்டு அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு யானைகள் சென்ற பின்பு பேருந்து மீண்டும் இயங்கின. யானைகள் கூட்டம் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்றதைக் கண்ட பயணிகள் சில நிமிடங்களில் அச்சத்தில் உறைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





