சாலையை கடக்க முயன்ற இளைஞர் விபத்தில் உயிரிழப்பு..!
சென்னையில் காசி தியேட்டர் அருகே சாலையை கடக்க முயன்ற தர்மபுரி இளைஞர் மீது டூ வீலர் மோதி தூக்கி வீசியதில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் தர்மபுரியை சேர்ந்த ரிஷி கௌதம் என தெரிய வந்தது.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் சாலையை கடக்க முயன்ற போது டூ வீலர் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி ஐடி பொறியாளராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





