10ம் வகுப்பு காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு..!
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
வேலைக்கு சென்று இருந்த தாயிடம் மதிப்பெண் குறைந்ததை மாணவர் செல்போனில் தெரிவித்துள்ளார். டியூஷனில் சேர்த்து விடுவதாக தாய் ஆறுதல் கூறிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





