கண்டெய்னர் லாரியை மடக்க முயற்சி.. சட்டென திரும்பியதால் ஊழியர் உடல் நசுங்கி பலி..!
சென்னையை அடுத்த மாதவரம் சுங்கச்சாவடியில் கண்டைனர் லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் உயிரிழக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஜெயபிரகாஷ் என்பவர் சுங்கச்சாவடியில் வரும் கண்டைனர் லாரிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கண்டைனர் லாரி வேகமாக வருவதை கண்ட அவர் உடனே தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளா. ஆனால் ஓட்டுனர் வேகமாக லாரியை திருப்பியதும் ஜெயப்பிரகாஷ் லாரியின் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி உதவியுடன் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவத்திற்கு முன்னால் லாரி ஒருவர் மீது மோதி சென்றதால் பின்னால் துரத்தி வந்த நபர்களால் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





