--- --:--:-- --

திடீரென வெறியான பசு மாடு.. பொதுமக்களை சரமாரியாக முட்டியது..!

4

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு நேரத்தில் பசு மாடு ஒன்று சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி தாக்கியது. அந்த பசு மாடு திடீரென ஆக்ரோஷமாகி போவோர் வருவோரை எல்லாம் விரட்டியது.

 

சாலையில் சென்ற வாகனங்களையும் விட்டு வைக்காத அந்த மாட்டினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தவறி விழுந்த இளைஞரை அந்த மாடு புரட்டி புரட்டி எடுத்தது. பசு தாக்கியதில் காவலர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

 

பல மணிநேர போராட்டத்திற்கு பின் மாடு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வெறி நாய் கடித்தால் மாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon