டெலிவரி பேக்குக்குள் இருந்த கத்தி.. ஜொமேட்டோ டெலிவரி பாய் செய்த காரியம்..!
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை ஜொமேட்டோ டெலிவரி பாய்க்கும் தனியார் மினி பேருந்து ஓட்டுனர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த ஜொமேட்டோ டெலிவரி பாய் கத்தியை எடுத்து ஓட்டுனரை குத்த முயன்றார். அருகில் இருந்தவர்கள் டெலிவரி பாயை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறு அனுப்பி வைத்தனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது.





