21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனக்கணிக்கப்பட்டுள்ளது.





