--- --:--:-- --

வட மாநில இளைஞர்கள் அட்டூழியம்.. ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்..!

6

சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதனை தாக்கிய நான்கு வடநாட்டு பயணிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ரயில் மதுரை வந்த பொழுது உசிலம்பட்டியை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் வினோத் ஏறியுள்ளார். அவர் மதுரையிலிருந்து நாசிக் பயணம் செய்த எஸ்ஆர்எம் சாலை சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார்.

 

அப்பொழுது அந்த நபர் முன்பதிவு செய்த டிக்கெட்டில் ஒருவர் பயணம் செய்யவில்லை என தெரியவந்தது. அதையடுத்து அந்த இருக்கையில் வேறு ஒருவருக்கு ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நாசிக் பயணிகள் நான்கு பேர் டிக்கெட் பரிசோதகருடன் வாக்குவாதம் செய்து தாக்கியதில் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் கோர்ட் அதிகாரிகளுக்கு வினோத் தகவல் தர அவர்கள் சேலம் ரயில் நிலையத்தில் வந்து நான்கு பேரையும் கீழே இறக்க முயன்ற பொழுது சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon