தேமுதிக தொடங்கி 18 ஆண்டு நிறைவு.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம்..!

தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய்காந்த் கடிதம் எழுதியுள்ளார்.

 

தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் சாதி மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம் ஒரே இனம் என்று கோட்பாடு சராதனத்தை கடைபிடிக்கும் கட்சியாகவும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயற்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் நிலவும் மணல் கொள்ளை, மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அண்டை மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் மக்களுக்காகவும் மாநில வளர்ச்சிக்காகவும் தேமுதிக தொடர்ந்து பாடுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழகம் முழுவதும் நடைபெறும் விழாக்கள் பொதுக்கூட்டங்களுக்கு பேர் ஆதரவு அளித்து தேமுதிக கட்சி வீரநடை போட்டு வெற்றி அடைய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்களை விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.