--- --:--:-- --

நடுரோட்டில் 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற கல்நெஞ்சுக்கார தாய்..!

6

காஞ்சிபுரத்தில் 2 பெண் குழந்தைகளை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற தாயை கடந்த ஒரு மாதமாக போலீசார் தேடி வருகின்றனர். பெரிய காஞ்சிபுரம் ரயில்வேஸ் அளவில் கடந்த மாதம் 14ஆம் தேதி தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த பெண் ஒருவர் குடிக்க தண்ணீர் வாங்க போவதாக கூறி அவர்களை அங்கேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

 

அழுது கொண்டிருந்த குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் குழந்தைகளின் விபரங்களை அருகில் உள்ள மாவட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். எனினும் எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon