கவரிங் கம்மலை பறித்து சென்ற நபர்..!
தாம்பரம் அருகே கம்மல் கழற்ற மூதாட்டியின் காதுகளை இழுத்த பொழுது அவரின் இரண்டு காதுகளும் மறைந்த நிலையில் கவரிங் கம்மலை பறித்து சென்ற நபர் வேறொரு வீட்டில் கைவரிசை காட்ட நோட்டமிட்ட பொழுது பொது மக்களிடம் சிக்கினார்.
நெடுங்குன்றம் பகுதியில் பணி முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடு ஒன்றை மர்ம நபர் நோட்டமிடுவதை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த நபரை பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நசீம் என்ற 19 வயதான அந்த நபர் புலம்பெயர் தொழிலாளி என்பதும் சில மாதங்களுக்கு முன் கூலி வேலை செய்து கொண்டு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும் இரண்டு தினங்களுக்கு முன்னர் மூதாட்டி உடன் கம்மல்களை பறித்து சென்றவர் என்பது தெரிய வந்தது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





