--- --:--:-- --

நள்ளிரவில் காட்டுக்குள் எரிந்திருந்த கார்.. காவலர்களுக்கு அதிர்ச்சி..!

5

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கார் டிக்கியில் ஒருவர் எரித்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காட்டுப்பகுதியில் நேற்று மாலை கார் ஓன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

டிக்கியில் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்த நிலையில் சடலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அணிந்திருந்த ஆபரணங்களை வைத்து இறந்தவர் ஆண் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

 

மேலும் காரின் பதிவு எண்னை வைத்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த நாகஜோதி என்பவர் காரின் உரிமையாளர் என்பதை கண்டறிந்த போலீசார் அது குறித்து விசாரணை செய்தனர். அப்பொழுது நாகஜோதி மாயமானதாக ஏற்கனவே சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது.

 

எனினும் கொலை செய்யப்பட்டது நாகஜோதி என்பதை உறுதி செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon