தலைக்கு ஏறிய போதையால் லாரியில் இருந்து விழுந்த டிரைவர்..!
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவு மதுபோதையில் லாரி ஓட்டிச் சென்ற ஓட்டுநரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். பாலக்காடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றி லாரி ஒன்று அபாயகரமாகவும் அதிவேகமாகவும் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட பொதுமக்கள் லாரியை விரட்டிச் சென்று கல்லடிகோடு என்ற இடத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் லாரி ஓட்டுநரை விசாரிக்க சென்ற போதுதான் அவர் போதையின் உச்சத்தில் இருந்தது தெரிய வந்தது.
கீழே இறங்குவதற்கு கூட முடியாமல் இருந்தவர் ஒரு கட்டத்தில் நிலைத்தடுமாறி தரையில் விழுந்து சாய்ந்தார். பின்னர் லாரியையும் ஓட்டுனராகிய பாலமுருகனையும் போலீசாரிடம் ஒப்படைத்த பொது மக்கள் வழக்கு பதிவு செய்யும்படி வலியுறுத்தினர்.






